Friday, 23 December 2011

[HM:249571] [TAMIL] தொப்பை குறைய





 





தொப்பை குறைய என்னன்ன சாப்பிடலாம்?

இஞ்சி சாறு தேன் கலந்து தினமும் சாப்பிட தொப்பை குறையும்.


அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.


VN:F [1.9.11_1134]
முழு அளவு படத்தைப் பார்






காலை காலையில் எழுந்த உடன் சூரிய குளியல் பண்ண வேண்டும். அப்புறமா 5டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அதில் பத்து  துளசி இலைகளை போட்டு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

காலையில் காப்பி குடிக்கூடாது இதுக்கு பதிலாக சுக்கு காபி குடிக்கலாம்
ஒருமணிநேரம் கழித்து எழுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
காலை 9  மணியளவில்  1 டம்ளர் கேழ்வரகு கஞ்சி அல்லது பார்லி கஞ்சி சாப்பிடலாம். அப்புறம் சாத்துக்குடி ஜூஸை கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம்.

காலை 10 மணி. – சாம்பல் பூசணி சாறு அல்லது முள்ளங்கி சாறு குடிக்கலாம்

காலை 11 மணி – அவலை ஊறவைத்து அதனுடன்  நாட்டுச் சர்க்கரை ,  வாழைப்பழம்,  கொஞ்சம்  ஏலக்காய் பொடி  எல்லாவற்றையும் சேர்த்து அப்படியே சாப்பிடலாம்.

 மதியம் சாப்பாட்டுக்கு  20 நிமிடத்திற்கு முன்னாடி காய்கறி சாலட் சாப்பிடலாம். அப்புறம் மதிய சாப்பாட்டுக்கு கீரையைப் பாதி வேகவைத்து  அதில் ஊறவைத்த பச்சைப் பாசிப் பருப்பை சேர்த்து அரிசியைக் குறைத்து நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.

மாலை4 மணி : முளைவிட்ட தானியங்கள் ஏதாவது ஒன்றை 4 டீஸ்பூன் எடுத்து அதில் கொத்துமல்லி, புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிடலாம். அப்புறம் காப்பிக்குப் பதில் சுக்கு, கொத்துமல்லி கலந்த காப்பி சாப்பிடலாம்.

மாலை 6 மணி : சிறிது வேகவைத்த முளைவிட்ட தானியத்தைச் சாப்பிடலாம்.

இரவு 8 மணி: சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பாக பச்சைக் காய்கறி சாப்பிடலாம.  பசும்பாலுக்குப் பதில் சோயா பால் சாப்பிடலாம்.






__._,_.___

ALWAYS KEEP SMILING

ALWAYS KEEP_MAILING

Just click here


M.YUSUF
COONOOR
THE NILGIRIS




--
https://groups.google.com/d/msg/hyd-masti/GO9LYiFoudM/TKqvCCq2EbMJ

No comments:

Post a Comment