இன்று நகரம் முதல் கிராமம் வரை எங்கும் நீக்கமற நிறைந்து வாழும் பூச்சி இனம்தான் ஈக்கள். பொதுவாக ஈக்கள் என்று சொன்னாலே நமக்கு அருவருப்புதான் தோன்றும். ஏனென்றால் அவை மலத்திலும், குப்பையிலும் உட்கார்ந்து அப்படியே நம் உடலிலும், உண்ணும் உணவுகள் மீதும் உட்காருவது தான். ஈக்களை முழுமையாக ஒழிக்க சுகாதாரமே சிறந்த வழி. அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.
இந்த ஈக்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பரவுவதற்கு ஈக்களே காரணமாய் இருக்கின்றன.
பொதுவாக ஈக்கள் அழுகிய காய்கறிகள், மீன் கடைகள், குப்பைத் தொட்டி, கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, மலஜலம் கழிக்கும் கழிப்பறை, மேலும் சுகாதாரமற்ற இடங்களில் அதிகம் உள்ளன.
பெண் ஈயானது ஒரு தடவைக்கு 80 முதல் 100 முட்டைகள் வரை இடும்.
ஈக்கள் கொசுக்களைப் போல் இரத்தத்தில் கலக்கும் நோய்க்கிருமிகளைக் கொண்டு அலைவதில்லை. ஆனால் உணவுப் பொருட்களின் மீது இலட்சக்கணக்கான பாட்டீரியாக்களை இறக்கி வைக்கும் பணியைச் செய்கின்றன.
ஈக்களுடைய ஆறு கால்களிலும் அதன் உடலிலும் பல்லாயிரக்கணக்கான உரோமங்கள் உள்ளன. இதனுடைய ஒவ்வொரு காலிலும் வட்டமான பிசின் போன்ற உறுப்பு உள்ளது. இந்த பிசின், ஒரு பசைப் பொருளாகும். ஈக்கள் கழிவுகளின் மீது உட்காரும்போது பாக்டீரியாக்கள் அந்த பிசின் போன்ற உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றன. அது மீண்டும் மனிதன் மீதோ, உணவுன் மீதோ உட்காரும்போது அதிலுள்ள பாக்டீரியாக்கள் உணவில் இறங்கி எளிதாக மனித உடலுக்குள் செல்கின்றன.
இதனால் வயிற்றுப்போக்கு, குடற்புழு, உடல் நமைச்சல், தோல் எரிச்சல், வயிற்றுப்புண், டைபாய்டு, தொற்றுக் கிருமிக் காய்ச்சல் என எண்ணிலடங்கா நோய்கள் உண்டாகின்றன. நாங்கள் கொசுக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் ஈக்களும் தன்பங்கிற்கு ஏராளமான நோய்களைப் பரப்புகின்றன.
ஈக்களைப் பற்றி கி.மு. 400ம் நூற்றாண்டுகளிலிருந்து செய்திகள் உள்ளன.
தற்போது தமிழ்நாட்டில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும், கடற்கரை யோரத்தில் வாழும் மக்களும்தான் ஈக்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலே கண்ட இடங்களில் கோழிப்பண்ணை அதிகம் இருப்பதால் அங்கு ஈக்களின் பெருக்கமும் அதிகமாக உள்ளது. மேலும் கடலோர மாவட்டடங்களிலும் மீன்கள் விற்கப்படும் இடங்களிலும் ஈக்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது.
இப்படி பல வகைகளில் மக்களைத் தாக்கும் ஈக்களிலிருந்து நம்மை பாதுகாக்க சில நடவடிக்களை மேற்கொண்டால் போதுமானது.
· அழுகிய பொருட்களை உடனே அப்புறப்படுத்தி அப்பகுதியை தூய்மையாக வைத்திருந்தால் ஈக்கள் பெருகாது.
· அசைவ பொருள் கிடங்குகளின் கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
· வீடுகளைச் சுற்றியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
· உணவுப் பொருட்கள் உட்பட எந்த பொருட்களையும் திறந்து வைப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.
· வீடுகளில் குப்பைகள் சேர்த்துவைக்காமல் அடிக்கடி அப்புறப்படுத்திவிடவேண்டும்.
· கோழிப்பண்ணை போன்ற இடங்களில் முழு சுகாதாரத்தைக் கடைப்பிடித்தால் ஈக்களை ஓரளவுக்கு அழிக்கலாம்.
· ஈக்கள் அதிகமாக இருந்தால், மஞ்சளை நீரில் கரைத்து ஈக்கள் அதிகம் உள்ள இடத்தில் தெளித்தால், ஈக்கள் உள்ளே வருவதைத் தவிர்க்கலாம்.
ALWAYS KEEP_MAILING
Just click here
M.YUSUF
COONOOR
THE NILGIRIS
--
https://groups.google.com/d/msg/hyd-masti/GO9LYiFoudM/TKqvCCq2EbMJ
No comments:
Post a Comment