Wednesday 18 July 2012

Re: [HM:254215] அல்டிமேட் ஸ்டார் அஜீத் ரசிகர்கள் கவனத்திற்கு…

padam romba kuppa machi mokkaya iruku padum boooooru adikudhu. so dont reccument to show this film.

2012/7/15 Mohamed Nafly <nafly.it@gmail.com>
அல்டிமேட் ஸ்டார் அஜீத் ரசிகர்கள் கவனத்திற்கு…

நம் தளத்தில் பிற நடிகர்களை பற்றி / பிற படங்கள் பற்றி அரிதாகவே செய்திகள் வரும். அப்படி வந்தா அதுக்கு காரணமும் இருக்கும். ஆனா, இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவை அளிப்பதை "அவசியம்" என்று கருதுகிறேன். அல்டிமேட் ஸ்டார் நமக்கு எப்பவுமே ஸ்பெஷலாச்சே. இது நிச்சயம் அவர் ரசிகர்களின் மனக்குறையை போக்கும் & ஒரு மிகப் பெரிய பூஸ்டாக அமையும்.
என்னைப் பொறுத்தவரை அஜீத் அவர்கள் மீது ஒரு நடிகன் என்பதை விட, ஒரு மனிதன் என்ற ரீதியில் நான் மிக மிக மதிப்பு வைத்துள்ளேன். அவரது துணிச்சலும், வெளிப்படைத் தன்மையையும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
சரி…. மேட்டருக்கு வர்றேன்….
சூப்பர் ஸ்டார் ரஜினியோட படங்கள் ஒவ்வொன்னும் மத்தவங்களுக்கு பிடிக்கிறது ரெண்டாவது பட்சம் இருக்கட்டும் அவர் ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் – படம் ஹிட்டாயிடும். அப்படித் தான் அல்டிமேட் ஸ்டாரும். அவரோட ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் விமர்சனங்களை எல்லாம் மீறி படம் ஹிட்டாயிடும் என்பதற்கு பில்லா 2 நல்ல உதாரணம்.
என் அனுபவத்தில் ரஜினி படங்களுக்கு அடுத்து இப்படி ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஒரு படத்துக்கு ஏற்பட்டதுன்னா அது பில்லா 2 தான். அதுக்கு காரணம் அஜீத் தான்.
இப்படி ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்போட ரிலீசான ஒரு படத்துக்கு மீடியா இப்படி கொத்துபரோட்டா மாதிரி விமர்சனங்கள் கொடுக்குதேன்னு ரசிகர்கள் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. தல திருப்பதி எல்லாம் போய்ட்டு பாலாஜியை தரிசனம் பண்ணிட்டு வந்தாரே, அதுக்கு பிரயோஜனமே இல்லையா? இப்படி ஒரு நெகடிவ் ரிவ்யூவ்ஸ் வரணுமா? அப்படின்னு ரசிகர்கள் ரொம்ப மன உளைச்சல்ல இருக்காங்க.
அடடா… இந்த படத்துக்கு கிடைச்ச மாதிரி மீடியாவின் எதிர்மறை விமர்சனம் மாதிரி வேறு ஏதாவது ஒரு படத்துக்கு கிடைச்சிருந்தா, படம் ரெண்டாவது ஷோவே நொண்டியடிச்சு உக்காந்திருக்கும். ஆனா, அத்துனை எதிர்மறை விமர்சனத்தையும் மீறி, படம் ஹவுஸ்புல்லா போகுதுன்னா இது தான் ஸ்டார் பவர். (நேற்றைக்கு சென்னையில எந்த தியேட்டர்லயும் ஈவ்னிங் ஷோ டிக்கட் கிடைக்கலே. இன்னைக்கும் படம் ஹவுஸ்புல் தான்.).
நான் எதுக்கு இதை சொல்றேன்னா…. ஒரு நடிகனுக்கு விமர்சனத்தைஎல்லாம் மீறி படத்தை ஹிட் பண்ற CAPACITY இருக்கணும். அப்படிப் பட்டவங்க தான், அடுத்த ஸ்டேஜ்க்கு போகமுடியும். கடவுள் அந்த சக்தியை தலக்கு கொடுத்தாச்சு. வேகமா ஓடும்போது நாலு பேரு இழுத்துவிட்டு, கீழே தள்ளி, கழுத்தை மிதிச்சி, அதையெல்லாம் எதிர்த்து போராடி, ஓடி ஜெயிக்குறதுல தான் திரில்லே இருக்கு. அர்த்தமும் இருக்கு. அந்த தில் தலக்கு ரொம்பவே இருக்கு. தல ரசிகர்களுக்கு அதுக்கு மேலயும் இருக்கு.
மேலும், இப்படிப்பட்ட விமர்சனங்களை பாஸிட்டிவா எடுத்துக்கணும். மீடியா சுட்டிக்காட்டிய குறைகளை அஜீத் அவர்கள் தன்னோட அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளனும். அவ்ளோ தான். எனக்குத் தெரிந்து, மீடியாவில் அஜீத்துக்கு எதிரானவர்கள் என்று யாருமே கிடையாது. அதனால அஜீத் ரசிகர்கள் இது விஷயமா கவலைப் படவேண்டியதில்லே. எல்லாருக்குமே, அவர் நல்ல படங்கள் பண்ணனும், நல்ல ஹிட் கொடுக்கணும் என்பது தான் ஆசை. குறைகளை வெளிப்படையா சொன்னத் தானே அவர் அதை சரி செய்துக்க முடியும்?
குறைகளை யாருமே சுட்டிக் காட்டாம "ஆஹோ ஓஹோனு" புகழ்ந்தாங்கன்னு வைங்க, கடைசி வரைக்கும் ஒருத்தரு தன்னோட குறைகள் எதுன்னு தெரியாமலேயே வாழவேண்டியிருக்கும். அதை சரி செஞ்சிக்க வாய்ப்பு கிடைக்காமலே போய்டும்.
ரெண்டாவது, மீடியாவைப் பொறுத்தவரை அவர் கிட்டே இன்னமும் அதிகம் அதிகம் எதிர்பாக்குறாங்க. அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவது என்பது அத்துணை சுலபமல்ல. ஊடகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, அவர்கள் "சூப்பர்" என்று சொல்வது போல, ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோ படம் தருவது அத்துணை சுலபம் அல்ல. அவர்களை திருப்தி படுத்தவேண்டும், நல்ல விமர்சனங்கள் வரவேண்டும் என்று ஒரே கோணத்தில் சிந்தித்தால், படம் ஜனரஞ்சகமாக அமையாமல் போய்விடவும் வாய்ப்புண்டு. So, எல்லாரையும் திருப்தி படுத்துற மாதிரி படம் பண்றது சாதாரண விஷயம் இல்லே.
எனக்கு தெரிஞ்சி, 2007 இறுதியில வெளிவந்த 'பில்லா 1′க்கு கூட இப்படித் தான் எழுதினாங்க. மங்காத்தாவையும் இப்படித் தான் சொன்னாங்க. அவங்கல்லாம் இப்படி சொல்றதை வெச்சு நானும் கூட படம் சரியில்லே போலிருக்குன்னு நினைச்சிட்டேன். ஆனா, உதயத்துல நான் படம் பார்க்குறேன்… அவ்ளோ சூப்பர் ரெஸ்பான்ஸ். படமும் நல்லா இருந்துச்சி.
உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்ல விரும்புறேன். 'பாட்ஷா' சூப்பர் ஸ்டாரோட கேரியர்ல எவ்ளோ பெரிய ஹிட், அது எவ்ளோ பெரிய முக்கியத்துவத்தை வகிக்குதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ரஜினி ரசிகர்கள் வட்டதையும் தாண்டி, அந்தப் படம் இன்னைக்கு வரைக்கும் பலரால் அந்தப் படம் ரசிக்கப்படுகிறது. ஆனா அந்தப் படத்துக்கு அப்போ விமர்சனம் எழுதின பத்திரிக்கை ஒன்னு என்ன எழுதிச்சு தெரியுமா? "இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு தன்னோட குரு கே.பாலச்சந்தர் பேரைக் காப்பத்தனும்னு எண்ணமே இல்லை போலிருக்கு!" அப்படின்னு. இது எப்படி இருக்கு? (எந்தப் பத்திரிக்கைன்னு நம்ம ரஜினி ரசிகர்கள் யாராவது கரெக்டா சொல்றாங்களான்னு பார்ப்போம்!)
அவ்ளோ ஏன், சூப்பர் ஸ்டாரோட 'சந்திரமுகி' எத்தனை நாள் ஓடிச்சி எவ்ளோ வசூல் சாதனை பண்ணிச்சுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அந்தப் படத்துக்கு ஒரு பெரிய வெப்சைட் என்ன ரிவ்யூ எழுதிச்சி தெரியுமா? "Chandramukhi doesn't suit Rajini" அப்படின்னு! ஹா… ஹா… ஹா…!!! (அதைப் பார்த்து காப்பியடிச்சு விமர்சனம் எழுதின வேற சில வெப்சைட்ஸ் எல்லாம் அப்புறம் தங்களோட விமர்சனங்களை சைலண்ட்டா மாத்திட்டாங்க!). இந்தியன் எக்ஸ்ப்ரஸ்ல சிவாஜிக்கு என்ன எழுதினாங்க தெரியுமா? "All Style; no substance" அப்படின்னு.
சரி… பில்லா 2 படம் உண்மையிலேயே எப்படித் தான் இருக்கு?
(ஹானஸ்ட்டா சொல்லனும்னா நான் இன்னமும் படம் பார்க்கலேங்க. ஆக்சுவலா நேத்தைக்கு நைட் போறதா இருந்திச்சு. ஆனா வேற ஒரு முக்கிய வேலைல மாட்டிகிட்டேன். போகமுடியலே. அடுத்த வாரம் போறேன்!) ஆனா, விமர்சனங்களை படிச்சது, படம் பார்த்த என் நண்பர்கள் & ரிலேட்டிவ்ஸ் சொன்னது, இதையெல்லாம் டாலி பண்ணி பார்க்கும்போது, விமர்சனங்கள்ள குத்தி குதறியிருக்குமளவிற்கு படம் இல்லை. நல்லா ரசிக்கும்படியே இருக்கு. என்று தான் தெரிகிறது.
ஒரு படம் சரியில்லேன்னா அதை அடுத்த ஷோ சீந்துவதற்க்கு கூட ஆள் இருக்கமாட்டாங்க. ஆனா எங்கே போனாலும் எங்கே பார்த்தாலும் பில்லா 2 பத்தி தான் பேச்சாயிருக்கு. இது ஒன்னே போதுமே… படத்தோட மெரிட் பத்தி சொல்றதுக்கு.
படத்தோட காமிரா, ஸ்டைலிஷ் சீன்ஸ், ஆக்ஷன், லொக்கேஷன், டயலாக்ஸ் இதெல்லாம் டாப்கிளாஸ்னு நேற்றைக்கு படம் பார்த்த ப்ரெண்ட் ஒருத்தரு எனக்கு நைட் ஃபோன் பண்ணி சொன்னாருங்க. சொஸைட்டியில பெரிய ஆள் அவர். ஆனால் ஒரு சராசரி சினிமா ரசிகர். ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா யார் படமாயிருந்தாலும் முதல் ரெண்டு நாள்ள போய்டுவார். மனசுக்குள்ளே எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாம, பிடிச்சிருந்தா பிடிச்சிருக்கு, இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடுவார். அதுக்கு காரணத்தையும் சொல்லிடுவார். அது கரெக்டாகவே இருக்கும். இதுரைக்கும் பல படங்களோட விமர்சனங்களை கரெக்ட்டா என்கிட்டே சொல்லியிருக்கிறார். படம் தேறும் தேறாதுன்னு க்ளியரா சொல்லிடுவார். பல நேரங்கள்ல இவர் சொன்னது கரெக்டாகியிருக்கு. மீடியா சொல்லியிருக்குற மாதிரி குறைகள் எதுவும் பெரிசா கண்ணுக்கு தெரியலே. படம் ஸ்டைலிஷா சூப்பரா இருக்கு சுந்தர் அப்படின்னு சர்டிபேகெட் கொடுத்திருக்கார்.
So, BRUSH ASIDE THE MEDIA REVIEWS; ENJOY BILLA 2 FOR ITS SPECTACULAR PRESENTATION! மங்காத்தாவின் வசூலை இது முறியடிக்கும் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்…
(குறிப்பு : "இந்த படம் ஓப்பனிங், எந்திரனை மிஞ்சிட்டதா அஜீத் ஃபேன்ஸ் சொல்றாங்க… சில டி.வி.சானல்ஸ்ல சொல்றாங்க…" அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு, ஒரு சிலர் அஜீத் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே கலகத்தை ஏற்படுத்த முனையுறாங்க. என்கிட்டேயே "இதுக்கு உங்க பதில் என்ன?"ன்னு கேக்குறாங்க. நேரம்டா. (இவங்களுக்கு வேற வேலை வெட்டியே கிடையாது என்பது வேற விஷயம்!) அவ்ளோ ஏன்… ஆஸ்கார் ரவிச்சந்திரனே அதை சொன்னாலும் ஐ டோன்ட் கேர்! என்னோட பதில் என்னன்னா…. இதை அஜீத் சொல்லட்டும்… நான் அப்போ பதில் சொல்றேன்! ஓ.கே.?)
——————————————————————–
அன்பு அஜீத் ரசிகர்களுக்கு : நான் உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைக்காதீங்க. எனக்கு அதக்கு தகுதியோ அனுபவமோ இல்லை. எல்லாம் ஒரு அன்புனால தான சொல்றேன். இந்தப் படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனம் தருபவர்களை கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து சில அஜீத் ரசிகர்கள் பேசி வருவதாக அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். நீங்கள் அப்படி செய்யும்போது, என்னாகும்னா வேறு யாராவது உங்களின் போர்வையில் நுழைந்து கலகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. அடுத்த முறை, அஜீத்தையோ அவரது படங்களையோ விமர்சிப்பவர்களை பதிலடியாக கடுமையாக பேசுபவர்களை கண்டால், "அது அஜீத் ரசிகரா இருக்காதுப்பா" என்று சொல்லவேண்டும். உங்களிடம் அத்தகைய ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். (இது சில ரஜினி ரசிகர்களுக்கும் சேர்த்துத் தான்).
சரி… இதுக்கு என்ன தான் வழி? எப்படித் தான் பதிலடி கொடுக்கிறது? சிம்பிள். "உங்களுக்கு படம் பிடிச்சிருக்குல்ல? குடும்பத்தோட போய் பாருங்க." இப்படி எல்லாரும் போனாலே, படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தான் சரியான பதிலடி. அவ்ளோ தான்!
ரெண்டாவது, விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் வாழ்வில் எதையுமே சாதிக்க முடியாது. அதுவும், அஜீத் அவர்களின் ரசிகராய் இருந்துகொண்டு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருப்பது அவரை அவமதிப்பது போலாகும். அதை அவரே விரும்பவும் மாட்டார். இரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதா என்ன? விமர்சனங்களால் ஒருவரை வீழ்த்திவிட முடியும் என்றால் சரித்திரத்தில் சாதனையாளர்களே இருக்கமாட்டார்கள். விமர்சனங்களை வரவேற்க துணியுங்கள்; வாழ்க்கை வளமாகும்! 

--
Keep Smiling !!!!!!
(¨`•.•´¨) It Is The Second
`•.¸(¨`•.•´¨) Best Thing U Can Do
(¨`•.•´¨)¸.•´ With Your Lips!
`•.¸.•´
¸.•´¸.•*¨) ¸.•*¨) Mohamed Nafly
(¸.•´ (¸.•´      ( ¸¸.•¨¯`•

--
We are also on Face Book, Click on Like to jois us
FB Page: https://www.facebook.com/pages/Hyderabad-Masti/335077553211328
FB Group: https://www.facebook.com/groups/hydmasti/
 
https://groups.google.com/d/msg/hyd-masti/GO9LYiFoudM/TKqvCCq2EbMJ

--
We are also on Face Book, Click on Like to jois us
FB Page: https://www.facebook.com/pages/Hyderabad-Masti/335077553211328
FB Group: https://www.facebook.com/groups/hydmasti/
 
https://groups.google.com/d/msg/hyd-masti/GO9LYiFoudM/TKqvCCq2EbMJ

No comments:

Post a Comment