Thursday 19 January 2012

[HM:250480] [tamil] பொது அறிவுத் தகவல்கள்





 

பொது அறிவுத் தகவல்கள்


கருவிகளும் பயன்களும்

1.    
 ஏரோமீட்டர் (Aerometer)-  காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

2.    
 அம்மீட்டர் (Ammeter)-  மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

3.    
 ஆடியோமீட்டர் (Audiometer)-  மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

4.    
 போலோமீட்டர் (Bolometer)-  வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

5.    
 கிரையோமீட்டர் (Cryometer)-  குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

6.    
 எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)-  மின்சாரம்வோல்டேஜ்திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

7.    
 மேனோமீட்டர் (Manometer)-  வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

8.    
 டோனோமீட்டர் (Tonometer)- ஒலியின் அளவை அளவிடும் கருவி.

9.   
 வெர்னியர் (Vernier)-  சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

10. 
 பைரோமீட்டர் (Pyrometer) -  அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

11.  
 பாத்தோமீட்டர் (Fathometer)-  ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

12.  
 டைனமோ (Dynamo)-  எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

13.  
 வேவ்மீட்டர் (Wavemeter)-  ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.

14.  
 பிளானிமீட்டர் (Planimeter)-  பரப்பை அளவிடும் கருவி.

15.   
 ரெக்டிஃபையர் (Rectifier)-  ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

16.   
 டென்சிமீட்டர் (Tensimeter)-  ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

எதைப்பற்றியது?

1.
 பேடாலஜி (Pedology)-  மண் அறிவியல் குறித்த படிப்பு.

2.
 பெட்ராலஜி (Petrology)-  பூமியில் பாறை உருவான விதம்அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

3.
 சூஜியோகிராபி (Zoogerogrphy)-  பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

4.
 சிஸ்மோலஜி (Seismology)-  பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

5.
 ஹைட்ராலஜி (Hydrology)-  பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

6.  
 கிளைமட்டாலஜி (Climatology)-  சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

7.
 பயோ ஜியோகிராபி (Biogeography)-  பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

எங்கேஅதிக உற்பத்தி?

1.  
 ஆப்பிள் -  இமாச்சலப் பிரதேசம்ஜம்மு-காஷ்மீர்.

2.
 வாழைப்பழம் -  குஜராத்மகாராஷ்டிரம்தமிழ்நாடுகேரளம்.

3.
 இஞ்சி -  கேரளம்மேகாலயா.

4.  
 கோகோ -  கேரளம்கர்நாடகம்தமிழ்நாடு.

5.
 திராட்சை -  மகாராஷ்டிரம்ஆந்திரம்கர்நாடகம்பஞ்சாப்உத்தரப் பிரதேசம்.

6.
 மாம்பழம் -  உத்தரப் பிரதேசம்பீகார்ஆந்திரம்மகாராஷ்டிரம்தமிழ்நாடு.

7.
 ஆரஞ்சு -  மகாராஷ்டிரம்கர்நாடகம்தமிழ்நாடுமேகலாயா.

8.
 மிளகு -  கேரளம்கர்நாடகம்தமிழ்நாடு

9.
 அன்னாசி பழம் -  அஸ்ஸாம்மேகாலயாமேற்கு வங்கம்திரிபுரா.

10 .
ஏலக்காய் கர்நாடகம்சிக்கிம்,கேரளம்தமிழ்நாடு.
 
11. முந்திரி -  கேரளம்ஆந்திரம்.

எந்தத் தொழிற்சாலை எங்கே?

1.   
 ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் -  ருப்னாராய்பூர் (மேற்கு வங்கம்).

2.   
 ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் –  பெங்களூருஹைதராபாத்லக்னோ.

3.   
 பாரத் அலுமினியம் நிறுவனம் -  சட்டீஸ்கர்மேற்கு வங்கம்.

4.   
 ஹிந்துஸ்தான் அலுமினியம்  ரேனுகோட் (உத்தரப் பிரதேசம்).

5.   
 இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் –   பெங்களூரு.

6.   
 எச்.எம்.டி. வாட்ச் –  பெங்களூரு.

7.   
 நேஷனல் நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர் மில்ஸ் –  நேபாநகர்.

8.   
 நேஷனல் பெர்ட்டிலைசர்  லிமிட்டெட் –  நங்கால்பட்டின்டாபானிப்பட்விஜய்பூர்.

9.   
 ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிட்டெட் -  மகாராஷ்டிரம் மற்றும் கொச்சி.

10.   
 ஃபெர்ட்டிலைசர் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா -  சிந்திரிகோரக்பூர்ராமகுண்டம்.

அணைகளும் மாநிலங்களும்

1.   
 நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம் )  -
கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதுவிவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.

2. 
 கக்கார்பாரா நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம்)-
தபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.

3.   
 கோஷி நீர்த்தேக்கம் (பீகார் மாநிலம்)-
கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும்நீர்மின்சக்தித்  திட்டத்துக்கும்   இந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது.

4.   
 சபரிகிரி நீர்த்தேக்கம் (கேரள மாநிலம்)-
பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.

5.   
 சாராவதி நீர்த்தேக்கம் (கர்நாடக மாநிலம்)-
ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது.

6.    
 மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் (ஒரிசா மாநிலம்)-
மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக படுகிறது

7.  
 பக்ராநங்கல் நீர்த்தேக்கம் (ஹிமாச்சலப் பிரதேசம்)-
சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப்ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளதுவிவசாயம்நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது.

8.     
 தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் 
தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதுஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும்இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும்,விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.

9.  
 சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் 
நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது,  குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும்  நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது.

10.    
 மேட்டூர் (தமிழ்நாடு)-
காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது.

 

ALWAYS KEEP SMILING

ALWAYS KEEP_MAILING

Just click here


M.YUSUF
COONOOR
THE NILGIRIS




--
https://groups.google.com/d/msg/hyd-masti/GO9LYiFoudM/TKqvCCq2EbMJ

No comments:

Post a Comment